ஆப்பிள் வெப் தொடருக்காக ஹாலிவுட் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே!
மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் புதிய வெப் தொடரில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே.
வெப் தொடர் என்றாலே இந்தியளவில் முன்னணியில் இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே தான். நெட்பிளிக்ஸில் இடம்பெற்ற பல பிரபல வெப் தொடர்களில் முன்னணி நாயகியாக நடித்து உலகம் முழுவதிலும் பிரபலமான ராதிகா ஆப்தே, தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஒரிஜினல் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில், தோனி, கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே பாலிவுட்டில் நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து அசத்தி வந்தார். அக்ஷய் குமார் தயாரிப்பில் வெளியான ஒரு படத்தில் முழு நிர்வாணமாக நடித்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே, தொடர்ந்து அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக படங்களில் நடிப்பதை வழக்கமாக்கினார்.
இதனால், உலகம் முழுவதும் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்க ராதிகா ஆப்தேக்கு ஆஃபர்கள் தேடி வந்தன.
தற்போது, மிஷன் இம்பாசிபிள் படத்தில் டாம் குரூஸுடன் நடித்த முக்கிய நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் நடிக்கும் ஆப்பிள் வெப் தொடரில் ராதிகா ஆப்தே லீடு ரோல் செய்கிறார்.