வேற ஹீரோவ வச்சி படம் பண்ண சொன்னாரு விஜய் அண்ணா!
பிகில் இசை வெளியீட்டு விழா இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கர வெறித்தனமாய் நடந்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் அட்லி, விஜய்யை தவிர வேறு யாரையும் வைத்து படம் எடுக்க மனம் போகவில்லை என்றார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தான் இந்தியளவில் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 1.3 மில்லியன் ட்வீட்களை செய்து சமூக வலைதளமான டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் வெறித்தனம் காட்டி வருகின்றனர்.
விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் லேட் நைட் 2 மணி வரைக்கும் நடித்து விட்டு மறு நாள் காலையில் 7 மணிக்கெல்லாம் ஷூட்டிங் வந்து தயாரிப்பாளர் காசை மிச்சப்படுத்திய டெடிகேஷன் வேற லெவல் என்றார்.
நடிகர் விவேக் விஜய்யுடன் 7, 8 படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால், இதுவரை அந்த வெற்றி போதை அவர் தலையில் ஏறியதை நான் பார்த்ததே இல்லை என்று கூறினார்.
இயக்குநர் அட்லி மேடையில் பேசும் போது, விஜய் அண்ணா, என் கிட்ட ஏன் வேற யாரையாவது வச்சி படம் பண்ணேன்னு கேட்டார். ஆனால், இப்படி டான்ஸ் ஆடுற இப்படி மாஸா இருக்கிற தளபதி இருக்கும் போது, என் மைண்ட்ல வேற ஹீரோவே தோண மாட்டேங்குதுன்னு சொல்லி அவர் கூடவே இந்த படத்தை பண்ணியிருக்கேன் என தனது ஃபேன் பாய் மூமெண்டை மேடையில் பேசியுள்ளார்.
பிகில் இசை வெளியீட்டு விழாவை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதால், சிலருக்கு தடியடி விழுந்ததாகவும், ரத்த காயங்களுடனும் பேட்டி கொடுக்கும் சம்பவங்களும் விழா மேடைக்கு வெளியே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.