அனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை மியூட் செய்வதில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டிராய்ட் தளங்களில் சோதனை முயற்சியாக தற்போது இந்த வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. ஹைட் மியூட்டட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த வசதியின் மூலம் மியூட் செய்யப்படும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை யாருக்கும் தெரியாத வண்ணம் மறைத்து வைக்க முடியுமாம்.
பீட்டா 2.19.260 வெர்ஷனை டவுன்லோடு செய்தால், இந்த புதிய சேவையை பயன்படுத்த முடியும். சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் ஆண்டிராய்ட் மட்டுமின்றி, ஐபோன் தளங்களுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் பேமண்ட் ஆப்ஷனும் விரைவில் இறுதிக்கட்ட சோதனை முடித்து முதற்கட்டமாக ஆண்டிராய்டு இயங்குதளங்களுக்கு பரிசோதனைக்காக வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பேமண்ட் செயலி வந்து விட்டால், பேடிஎம், போன் பே மற்றும் கூகுள் பே உள்ளிட்ட பேமண்ட் செயலிகளுக்கு கடும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.