பிகிலுக்கு பை சொன்ன நயன்தாரா.. சைராவுக்காவது ஹாய் சொல்வாரா?
படத்தின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் தனது கொள்கையை பிகில் இசை வெளியீட்டிலும் நயன்தாரா பின்பற்றியுள்ளர்.
விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனது கொள்கைகளை விட்டுவிட்டு நடிகை நயன்தாரா கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கல் செய்திகள் வெளியான நிலையில், இறுதி வரை விழாவில் கலந்து கொள்ளாமல் தனது கொள்கையை கைப்பற்றியுள்ளார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில், தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதிலாவது நயன்தாரா கலந்து கொள்வாரா இல்லை அப்பவும் தல அஜித் ஸ்டைலையே பின் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்திலும் நயன்தாரா நடித்து வரும் நிலையில், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டால், அத்தனை நிகழ்ச்சிக்கும் சென்றாக வேண்டும் என்ற கட்டாயம் தொடர்ந்து வருவதாலே பிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் நயன்தாரா தவிர்த்துள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.
மேலும், பிகில் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை போலியாக தயாரித்து விற்றதாகவும், பல ஆயிரம் ரூபாய்க்கு ஒரிஜினல் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்ததாகவும், பிகில் இசை வெளியீட்டு விழாவின் பின்னணியில் நடந்த நிகழ்வுகள் குறித்த ஒவ்வொரு தகவல்களாக வெளியாகி வருகின்றன.