சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா?
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சையின்ஸ் ஃபிக்ஷன் படப் பிரச்னையை சிவகார்த்திகேயன் தலையிட்டு முடித்து வைத்துள்ளாராம்.
வேலைக்காரன் படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சையின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமீட் ஆனார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கு பிறகு இந்த படம் குறித்த செய்திகள் வெளிவரவே இல்லை. என்னவென்றால் பார்த்தால், 24 ஏம் எம் ஸ்டூடியோஸ் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் வெளியான ரெமோ உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததால், பைனான்ஷியர்கள் ரவிக்குமார் படத்திற்காக ஆர்.டி. ராஜாவுக்கு நிதி வழங்குவதை நிறுத்தி விட்டார்களாம்.
இதனால், அந்த பெரிய பட்ஜெட் படம் அப்படியே நின்று போனது. சிவகார்த்திகேயனும், அந்த விசயத்தில் தலையிடாமல் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என பிசியாகிவிட்டார். தற்போது, அந்த பிரச்னை தொடர்ந்து இழுத்தடித்து வந்த நிலையில், பைனான்சியர்களுடன் அமர்ந்து பேசி சுமூக தீர்வை சிவகார்த்திகேயன் எட்டியுள்ளதாகவும், இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்றும், தங்களுக்கான தொகைகள் வட்டியுடன் வந்து சேரும் என்றும் கூறி மீண்டும் ஆர்.டி. ராஜாவுக்கு உதவி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
பிரச்னைகள் முடிந்த நிலையில், நவம்பர் மாதம் ரவிக்குமார் – சிவகார்த்திகேயனின் சையின்ஸ் பிக்ஷன் படம் விட்ட இடத்தில் இருந்து ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் புதிய படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.