உடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..
எங்கேயும் காதல் படத்தில் அறிமுகமான ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். இதன் பிறகு மளமளவென பல தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ராக்கெட் வேகத்தில் பறந்த அவரது மார்க்கெட் திடீரென்று விழுந்தது. அவரது குண்டான தோற்றத்தை ஒரு சிலர் கிண்டல் செய்ததுடன் உடல் இளைத்தால்தான் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியும் என்று அவரிடம் கொளுத்தி போட்டனர். அவரும் அதை நம்பி உடலை ஸ்லிம்மாக மாற்ற முடிவு செய்து காணாமல் போனார்.
ஹன்சிகாவை கொஞ்ச நாட்களாகவே கோலிவுட் பக்கம் காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்த போது கடந்த ஆண்டு குலேபகாவலி படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தார். அதில் ஹன்சிகாவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒல்லிப்பச்சானாக மாறியிருந்தார்.
ஹன்சிகாவுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டதோ என்று ரசிகர்கள் பேசினர். அடுத்தடுத்து அவர் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் தனது ஒல்லியான தோற்றப் படங்களை வரிசையாக பகிர்ந்தார்.
தற்போது மகா என்ற படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இதில் சாமியார்போல் காவி உடை அணிந்து தம் அடிக்கும் காட்சியில் நடித்தது பரபரப்பானது மட்டுமல்ல, போலீஸில் புகார் வரை சென்றது. அந்த காட்சி சென்சாருக்கு தப்புமா என்பது படம் வந்தால்தான் தெரியும். இந்த பரபரப்பு ஹன்சிகாவுக்கு நல்ல பப்ளிசிட்டியை தேடி தந்தது. அடுத்தடுத்து இரண்டு தமிழ் படம் ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் இன்னமும் ஒல்லியான தோற்றத்திலும், மொழு மொழு என்றிருந்த அவரது முகம் சப்பிப்போட்ட மாங்கொட்டை போலவும் இருப்பதாக பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன இப்படி ஆயிட்டிங்க என்று சிலர் கவலையுடனும். இன்னும் சிலர் இப்பகூட நீங்க சூப்பரா இருக்கிங்க என்றும் கமென்ட் போட்டுள்ளனர்.
உடல் இளைப்பதற்காக ஹன்சிகாவுக்கு லிபோசக்சன் எனப்படும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.