டூயல் பாப்-அப் செல்ஃபியுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சிங்கிள் பாப்-அப் செல்ஃபியுடன் இப்போது தான் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின. அதற்குள் டூயல் பாப்-அப் செல்ஃப்களுடனான புதிய ஸ்மோர்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வி17 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஃபுல் வியூ டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட் போனில் ஸ்நாப் டிராகன் 675 பிராசஸர் இருக்கிறது.
போட்டோக்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக்கியமாக 32 எம்.பி. பாப்-அப் கொண்ட செல்ஃபி கேமரா ஒன்று அதன் கூடவே 105 டிகிரி அர்ட்ரா வைடு சென்சார் கொண்ட 8 எம்.பி. கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20ம் தேதியான நேற்று இதன் விற்பனை தொடங்கி வரும் செப்டம்பர் 27ம் தேதி வரை ஃபிளாஷ் சேல் செய்யப்படுகிறது. இதன் விலை 29,990 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் எத்தனை எத்தனை புதிய டிசைன்களில் புது வகையான கேமாரக்களுடன் ஸ்மார்ட்போன்கள் வர உள்ளதோ தெரியவில்லை.