பிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், ஓய்வு எடுப்பதற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார்.
தீபாவளிக்கு விஜய்யின் பிகில் விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நாளை மாலை சன் டிவியில் பிகில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி புதிய டி.ஆர்.பி.யை தொட காத்துக் கொண்டிருக்கிறது. என்னதான், நடிகர் விஜய் பேசிய அத்தனை பேச்சுகளும், செல்போன் வீடியோக்கள் மூலம் திருட்டு பிரிண்ட்களாக வந்தாலும், ஹெச்.டி. தரத்தில் அந்த தரமான சம்பவத்தை காண மக்கள் டிவி பெட்டிக்கு முன் ஒன்றுகூடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சுபஸ்ரீ விவகாரம், குட்டிக் கதை மூலம் அஜித் ரசிகர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை, தனது ரசிகர்களை பாட்டுப்பாடி குஷி படுத்துதல், வெளியே பிளாக்கில் டிக்கெட், ரசிகர்களுக்கு போலீஸ் அடி உதை என அத்தனை கமர்ஷியல் கலவைகளும் நிறைந்து பிகில் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்து இன்னும் டாக் ஆஃப் தி டவுனாக நாளை வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன், வெளிநாட்டுக்கு விஜய் பறந்துள்ளார். விமான நிலையத்தில், விஜய் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நவம்பர் மாதம் தளபதி 64 படம் துவங்க உள்ளதால், பிகில் ரிலீஸ் வரை வெளிநாட்டில் விஜய் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.