எம்மி விருது விழா: மகுடம் சூடிய கேம் ஆஃப் த்ரோன்ஸ்!

71வது எம்மி விருது விழாவில் சிறந்த டிராமாவிற்கான விருதினை கேம் ஆஃப் த்ரோன்ஸ் தட்டிச் சென்றது.

டிவி மற்றும் வெப் தொடர்களுக்காக ஆண்டு தோறும் அமெரிக்காவில் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான எம்மி விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்து முடிந்துள்ளது.

இந்த விருது விழாவில் கடந்த 11 ஆண்டுகளாக டிவி தொடர்களின் அரசனாக திகழ்ந்து வரும் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு சிறந்தா டிராமா தொடர் விருது வழங்கப்பட்டுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் தனது அனைத்து அத்தியாயங்களையும் கடந்த ஏப்ரலில் வெளியான இறுதி பாகத்துடன் நிறைவு செய்த நிலையில், இந்த கெளரவம் அதில், உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த 11 ஆண்டுகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் 4 முறை சிறந்த டிராமாவிற்கான எம்மி விருதுகளை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நகைச்சுவை தொடருக்கான விருதினை அமேசானின் வெப் தொடரான ஃப்ளீட்பேக் தன் வசம் படுத்தியது.

மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதினை கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்த பீட்டர் டின்க்ளேஜ் பெற்றுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸில் டார்கேரியன் ராணியாக நடித்த எமிலியா கிளார்க்கிற்கு சிறந்த நடிகை விருது கிடைக்கவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கில்லிங் ஈவ் தொடரில் நடித்த ஜோடி கோமருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநர் விருது ஓசார்க் தொடரை இயக்கிய ஜேசன் பேட்மேனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் விருதும் கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்த கேட் ஹாரிங்டனுக்கு பதிலாக போஸ் தொடரில் நடித்த பில்லி பார்ட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

More News >>