புது மொபைல் வாங்குகிறீர்களா..? ஜியோ வழங்கும் கேஷ்பேக் ஆஃபர்!
புதிய ஸ்மார்ட் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது ஜியோ.
ரிலையன்ஸ் ஜியோ தனது 'புட்பால் ஆஃபர்' திட்டம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் முதன்முதலாக ஜியோ நெட்வொர்க் பெற்று ஆக்டிவேட் செய்தால் உடனடியாக 2,200 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும் என ஜியோ அறித்துள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் சாம்சங், ஜியோமி, மோடரோலா, பேனாசோனிக், ஹுவேய், நோக்கியா, எல்ஜி, மைக்ரோமெக்ஸ், ப்ளாக்பெரி, மற்றும் ஜியோ லைஃவ் ஆகிய மொபைல் போன்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.