நடு விரலை காட்டாதீர்கள்.. அப்புறம் கம்பி எண்ண வேண்டியது தான்

பாலியல் தொல்லை தரும் ரீதியில் பெண்களிடம் நடு விரலை காட்டினால் இனி சிறைத் தண்டனை தான் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தினாலோ, நடு விரலை நீட்டி சில குறியீடுகளை செய்தாலோ அதுவும் பாலியல் தொல்லை தான் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின் முடிவில் தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது தங்கையிடம் தனது கணவர் நடுவிரலை காண்பித்தும், உடல் ரீதியாக அவரை தாக்கியதாகவும் கடந்த 2014-ம் ஆண்டு மே 21-ம் தேதி வழக்கு பதிவு செய்திருந்தார்.

அந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அந்த நபருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட உள்ளது.

முதலில், சொத்து தகராறு காரணமாக தன் மீது போலியான வழக்கு சோடிக்கப்பட்டது என அந்த நபர் மறுத்து வந்த நிலையில், தற்போது, உரிய சாட்சிகள் கணவருக்கு எதிராக இருப்பதால், நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அறிவிக்க உள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் அந்த நபருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>