இந்தியாவின் தந்தை.. குளோபல் கோல் கீப்பர்.. உலக அரங்கில் எகிறும் மோடியின் செல்வாக்கு!
ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவை தூய்மைப்படுத்தியுள்ளார் மோடி என அவரை கெளரவித்து குளோபல் கோல் கீப்பர் விருதை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் டிரம்பை இந்திய நேரப்படி இன்று அதிகாலை சந்தித்தார். அப்போது மோடியுடன் மகிழ்ச்சியாக உரையாற்றிய டிரம்ப், இந்தியா மோடியின் ஆட்சியின் கீழ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும், இந்தியாவின் தேச தந்தையாக மோடி மாறியுள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.
பின்னர், கேட்ஸ் மற்றும் மெலிந்தா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த விழாவில், ஸ்வச் பாரத் என அழைக்கப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் 10 கோடிக்கும் மேலான கழிவறைகளை கட்டியதற்காகவும், மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் பிரதமர் மோடிக்கு குளோபல் கோல் கீப்பர் விருதினை மைக்ரோசாஃப்டின் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான பில் கேட்ஸ் அளித்து பிரதமர் மோடியை கெளரவித்தார்.
இப்படி ஒரே நாளில், உலக அரங்கில் பிரதமர் மோடியின் புகழ் உச்சிக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.