ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய காப்பான் படக்குழு!
காப்பான் படத்தின் சிறிக்கி வீடியோ பாடல் யூடியூபில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான காப்பான் படம், கடுமையான விமர்சனங்களுக்கு நடுவிலும் பாக்ஸ் ஆபிஸில் சரியான வசூலை அள்ளி வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பாடலான சிறிக்கி பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காப்பான் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் நேற்று சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு போல் நடத்தியது. அதில், முதலில் எந்த பாடல் வீடியோவை இணையத்தில் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறீர்கள் என போல் வைக்கப்பட்டது.
ஓபனிங் பாடலான சிறிக்கி, கடைசி பாடலான குறிலே குறிலே மற்றும் பப் பாடல் என மூன்று பாடல்கள் ஆப்ஷனாக வழங்கப்பட்டது.
இதில், 70 சதவீதத்திற்கும் மேலான ரசிகர்கள் சிறிக்கி பாடலுக்கு வாக்களிக்க தற்போது, சிறிக்கி முழு வீடியோ பாடலை சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கிராமிய குத்து பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுதியுள்ளார். செந்தில் கணேஷ் மற்றும் ரமணி அம்மாள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.