தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
வெற்றி கேப்டன் தோனியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவராஜ் சிங் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தோனியின் ஓய்வு குறித்து யாரும் விவாதிப்பது தேவையற்ற செயல் என்றார்.
தோனி இந்தியாவிற்காக பல சாதனைகளை நிகழ்த்தியவர் என்றும், உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்றும் கூறிய யுவராஜ் சிங், அவர் இன்னும் சில காலம் விளையாட விரும்பினால், விளையாட்டுக் குழு அவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
தோனி ஒரே நாளில் இந்த நிலைமையை அடையவில்லை என்றும், அவரது தொடர் முயற்சி தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது என்றும், அவரது அறிவுரைகள் மட்டும் ஆட்ட நுணுக்கங்கள் இந்திய அணிக்கு தேவை என்றும் யுவராஜ் சிங் கூறினார்.
பின்னர், இளம் வீரர் ரிஷப் பந்தை தோனியுடன் ஒப்பிடுவதும், அவருக்கும் அழுத்தம் கொடுப்பது மிகவும் தவறான ஒன்று என்றும், ரிஷப் பந்தை ஊக்கப் படுத்த வேண்டும் அப்போது தான் அவர் சிறந்த வீரராக உருமாறுவார் என்றும் யுவராஜ் கூறினார்.