மன்மோகனுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன்சிங். அதற்கு முன்பாக, நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட பதவிகளை வகித்த மன்மோகன் சிறந்த பொருளாதார நிபுணர்.
மன்மோகனுக்கு பிரதமர் மோடி, ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டிருக்கிறார். அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மன்மோகன் சிங்கின் பிறந்த நாளில் அவரது தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, நாட்டை நிர்மாணிப்பதில் அவரது உன்னதமான பங்கு ஆகியவற்றை அங்கீகரிப்போம். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாடாளுமன்றம் மற்றும் அரசியலில் அவரது தலைமையால் நாடு தொடர்ந்து பலன் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். இதே போல், திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.