ஆத்தாடி.. இப்படி எல்லாமா மேஜிக் செய்வாங்க.. குழந்தையை இரண்டாக பிளந்து அதிரவைக்கும் வீடியோ
தந்தை ஒருவர் குழந்தையை இரண்டாக பிளந்து மாஜிக் செய்யும் காட்சி காண்பவர்களை அதிரவைத்துள்ளது. இந்த மாஜிக் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஐஸ்டின் போலோம். மேஜிக் கலைஞரான இவர் தனது குழந்தையை வைத்து பார்ப்பர்வர்களுக்கு திக் என்னும் மேஜிக்கை செய்து அதிரவைத்துள்ளார்.
ஐஸ்டின் போலோமிற்கு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை படுக்கையில் அழகாய் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கு, நான்கு புத்தகங்களுடன் வந்த ஐஸ்டின், ஒரு புத்தகத்தை குழந்தையின் வயிற்றின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தினார். அந்த புத்தகம் குழந்தையின் உடலில் இறங்கியது. பின், குழந்தையின் கால்களை இழுத்தபோது கால் பாகம் தனியாக வந்துவிட்டது. குழந்தை சற்று விழித்துக்கொண்ட போதும் அது ஒன்றும் உணரவில்லை. பிறகு, மீண்டும் கால பாகத்தை உடலுடன் இணைத்து வித்தார். இந்த காட்சி காண்பவர்களை அதிர வைத்துள்ளது.
இந்த வீடியோ பேஸ்புக், யூட்யூப் உள்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் மட்டும் 143 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்றும் 628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதோ அந்த வைரல் வீடியோ..