அஜித்தின் அடுத்த பட நாயகி இவர்தானா?

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும்  புதிய படத்தில் பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுட்டலா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பெண்களின் முக்கியத்துவம் மற்றும் நோ மீன்ஸ் நோ அஜித்தின் சிம்மக் குரலால், பட்டி தொட்டி எங்கும் வைரலாக பரவியது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தார். ஆனால், போனி கபூரின் முதல் தேர்வு வித்யா பாலன் இல்லையாம். வித்யா பாலனை அணுகும் முன், பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுட்டலாவிடம் தான் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

ஆனால், அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது. அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என ஊர்வசி ரவுட்டலா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் புதிய படத்தில் ஊர்வசிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>