மூன்று மாஸ் ஹீரோக்கள் வைத்து படம்… மீண்டும் சாதிப்பாரா பாலா!
பல வித்தியாச கதைகளத்துடன் படங்களை இயக்கும் இயக்குனர்களுள் ஒருவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிதாமகன், சேது, பரதேசி போன்ற படங்களை வெற்றி வித்தியாசமான படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்து வைத்திருந்த பாலா, இறுதியாக விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
ஆனால், பாலாவிற்கு இதுவரை நிகழாத அளவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை அந்த படம் ஏற்படுத்தி கொடுத்தது. இதற்குமேல் பாலா, படம் இயக்குவாரா என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்த நிலையில், தற்போது சூர்யா, ஆர்யா மற்றும் அதர்வா என மூன்று ஹீரோக்களை வைத்து மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான காப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. மேலும் அவர் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகிறது.
அதற்கு அடுத்ததாக பாலாவின் இந்த புதிய படம் தொடங்கும் என்றும், இதுகுறித்த, அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.