ஆடம்பர வாழ்கை வேண்டாம்.. ஆன்மிக வாழ்க்கையே வேண்டும்!
பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமலாபால் தான் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு இவ்வாறு இயற்கையில் ஒன்றியுள்ள வாழ்க்கை பிடிப்பதாகவும் ஆடம்பர வாழ்வை வெறுப்பதாகவும் கூறியுள்ளார்.
மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல படங்களில் நடித்தார். பிறகு இயக்குனர் விஜயை திருமணம் செய்துக்கொண்ட அமலாபால் சில பிரச்சனை காரணமாக அவரை விவாகரத்தும் செய்துக்கொண்டார். அதற்கு பின்னர் படவாய்ப்புகளும் அவ்வளவாக இல்லாமல் இருந்த அமலாபாலுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல் கிடைத்தது ஆடை படம்.
இந்த படத்தில் துணிச்சலாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார் அமலாபால். இதனால் பல இயக்குனர் இவரிடம் கதை சொல்ல காத்திருக்கின்றனர். ஆனால் படத்தில் நடிப்பதை விட பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் அமலாபால்.
இமயமலை கீழ் கங்கை வரை ஆன்மிக பயணம் மேற்கொண்டு வந்திருக்கும் அமலாபால். தனக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும் இவ்வாறு இயற்கை பயணம் மேற்கொள்வது மனதுக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறுகிறார்.
அதனால்தான், அடிக்கடி ஒரு சிறிய பையில் துணிகளை வைத்துக்கொண்டு இயற்கை பயணத்திற்கு கிளம்பிவிடுகிறேன் என கூறுகிறார், அமலாபால்.