தல ரசிகர்களால் வாயடைத்துப்போன ராஷ்மிகா !
விருதுவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்று சொன்னதும், அஜித் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு வாயடைத்துப்போனார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா, கிரிக்பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு தெலுங்கில் விஜய்தேரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் ராஷ்மிகா தான் இருந்தார்.
பல மேடைகளில் தனக்கு அஜித், விஜய்யுடன் நடிக்க விருப்பம் என ராஷ்மிகா கூறுவார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனோ அந்த வாய்ப்பு நழுவியது.
ஆனால் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், ராஷ்மிகா. இந்நிலையில் அண்மையில் நடந்த விருதுவிழா ஒன்றில் பேசிய ராஷ்மிகா. தமிழில் உங்களுக்கு யாருடன் நடிக்க விருப்பம் என எழுப்பபட்ட கேள்விக்கு, அஜித்துடன் நடிக்க விருப்பம் என பதிலளித்தார்.
இதனை கேட்ட அஜித் ரசிகர்கள் சிறிது நேரம் தங்களது ஆரவாரத்தை காட்டினர். இவ்வளவு சத்தத்தை கண்டு ராஷ்மிகா வாயடைத்து நின்றார்.