ரஜினியை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாகும் விஜய்சேதுபதி ரூ 10 கோடி சம்பளம் பேட்ட மாளவிகா மோகனன் கதாநாயகி
விஜய்சேதுபதிக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதில்லை. வித்தியாச மான வேடங்களில் நடிக்க எண்ணுகிறார். தவிர பிரபல ஹீரோக்கள் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டாலும் ஒகே சொல்கிறார்.
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டதும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக்கொண்டார். தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்புகொண்டிருக் கிறார்.
அட்லி இயக்கும் பிகில் படத்தை முடித்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தில்தான் விஜய்சேதுபதி வில்லானாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 64வது படமாக உருவாக உள்ளது. விலானாக நடிக்க விஜய்சேது பதிக்கு ரூ. 10 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் ரூமர் கிளம்பி உள்ளது.
விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மேனன் நடிக்க உள்ளார். இதற்காக மாளவிகாவுக்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற சில நிமிடங்களில் கதாநாயகியாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அனிரூத் ரவிச்சந்திரன் இசை அமைக்க உள்ளார். இப்படத்தை பற்றி அடுத்தடுத்து 3 நாட்கள் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியிட உள்ளதாக பட தரப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. இப்படம் பாட்ஷா பாணியில் தாதா கதையாக உருவாக உள்ளது. இப்படத்தை பெரும் பட்ஜெட்டில் எக்ஸ் பி பிலிம் கிரியேட் டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.