குஜராத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பரிதாபச் சாவு.. மோடி, அமித்ஷா இரங்கல்
குஜராத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் வடக்கேயுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி - டன்ட்டா நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ், திரிசுல்யா காட் என்ற மலைப்பகுதியில் கவிழ்ந்தது. சுமார் 75 பயணிகளுடன் ஒரு கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது அந்த சுற்றுலா பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், டிரைவரின் மலைச்சரிவில் திடீரென சரிந்து விட்டது.
இந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த மோசமான விபத்து குறித்து அறிந்து மிகவும் கவலையுற்றேன். இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக மாநில அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.