ஷாலினி பாண்டேயை காதலிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். சிவானி படேல், நாசர், ஜெயசித்ரா, ரேகா, மனோபாலா, தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கும் பொறுப்பும் ஏற்றிருக்கிறார்.
கல்லுரியில் படிக்கும் இளைஞர் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுசுட்டியாகவும், பல்வேறு திறமைகளும் கொண்டவராக வருகிறார். அத்துடன் முறைப்பெண்ணுடன் அவருக்கு ஏற்படும் இதமான காதலும் உள்ளடக்கிய கதையாக 100 பர்சென்ட் லவ் உருவாகிறது. காதலுக்கும், கவர்ச்சி ஈர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் நாசுக்காக இப்படம் விளக்குகிறது. எம்எம்.சந்திரமவுலி இப்படத்தை இயக்கி உள்ளார்.
கிரியேட்டிவ் சினிமாஸ் மற்றும் என்ஜே என்டர்டெய்மென்ட் இணைந்து தயாரித்திருக்கிறது. 100 பர்சென்ட் காதல் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது