அடல்ட் படத்தில் நடிச்சிருக்கக்கூடாது வருந்தும் யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் பெயரை சொன்னாலே இளவட்டங்களுக்கு ஒரு கிக்குதான். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் ஏற்று நடித்த கவர்ச்சியாக கதாபாத்திரமே அதற்கு காரணம். அப்படம் ஹிட்டாக அமைந்தாலும் யாஷிகாவுக்கு பலரிடமிருந்து எதிர்மறை விமர்சனம்தான் வந்தது. அவரை பலரும் திட்டி தீர்த்தார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் பதில் எதுவும சொல்லாமல் குற்ற உணர்வுடன மவுனம் காத்து வருகிறார் யாஷிகா. இதுபற்றி அவர் கூறும்போது,'இருட்டு அறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நான் நடித்திருக்கக்கூடாது. அதில் நடித்ததற்காக வருந்துகிறேன். அது நான் செய்த தவறு. பட குழுவினர் என்னிடம் கதை சொன்னபோது இடம்பெறாத காட்சிகளை ஷூட்டிங்கின்போது படமாக்கினார்கள். முன்னேமே சொல்லாமல் கொள்ளாமல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அப்படத்தில் நடித்ததற்காக எனக்கு திட்டுதான் கிடைத்தது. இனிமேல் நடிப்புக்கு முக்கியமுள்ள வேடங்களையே ஏற்று நடிக்க உள்ளேன். கிளாமராக நடிப்பதை குறைத்துக்கொள்வேன்.

மஹத்துடன் நடித்துள்ள இவன்தான் உத்தமன் படத்தின் டீஸர் விஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. சஸ்பென்ஸ், த்ரில்லருடன், மக்கள் பிரச்னையுடன் தொடர்புடையா படமாக இது உருவாகியிருக்கிறது. மேக்வென் இயக்கி உள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார்.

More News >>