ரஜினியை போலீஸ் உடையில் சந்தித்த லதா தர்பார் படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் விரைவில் லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கி வருகிறார்.
முதல் முறையாக கூட்டணி ரஜினியுடன் இணைந்திருக்கிறார் முருகதாஸ். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வரும் பொங்கல் தினத்தில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் லீக் ஆகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பிறகு ரஜினியின் மனைவி லதா திடீரென்று விசிட் செய்தார். அவரைக்கண்டதும் படக்குழுவினர் ஆச்சரியம் அடந்தனர். லதாவை, ரஜினி அன்போடு வரவேற்றார். போலீஸ் கெட்டப் பில் நடித்த சில அசததலான காட்சிகளை லதா பார்த்து ரசித்தார். பின்னர் ரஜினியின் பின்னால் இருந்து அவரை கட்டி அணைத்தவாறு புகைப்படத்துக்கு போஸ் அளித்தார். இப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வட மாநிலங்களில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக ரஜினியுடன் லண்டன் பறக்கிறது படக்குழு.