விஜய் 64 ல் இணையும் மலையாள நடிகர் - ஆண்டனி வர்கிஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புது கூட்டணி
விஜய் நடிக்கும் 63வது படமாக அட்லி இயக்கத்தில் பிகில் படம் உருவாகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இதில் விஜய்சேதுபதி நெகடிவ் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக பெரும் தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. ஹீரோயினாக மளவிகா மோகனன் நடிக்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் தமிழுக்கு புதுமுகமாக அறிமுகமாகிறார் ஆண்டனி வர்கிஸ். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, அங்கமலே டைரிஸ் படத்தில் நடித்தவர்.மேலும் மற்றொரு நடிகரும் இணை உள்ளார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர். அந்த இளம் நடிகர் வேறுயாருமல்ல நம்ம இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனுதான். இதில் அவர் கல்லூரி மாணவராக வேடம் ஏற்கிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.
இப்படத்திற்காக விஜய்யின் போடோ ஷூட் நடந்துள்ளது. தனது கெட்டப்பை பார்த்து ஆச்சரியப்பட்டாராம்.