தந்தையுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி - தாரைதப்பட்டை ஹீரோயின் பேட்டி
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கோலிவுட்டின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் பாம்பன். இந்த படம், பழமையும், புதுமையும் கலந்த கதை களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கும் பாம்பன் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி முதல்முறையாக அவரது தந்தை சரத்குமாருடன் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. இதில் வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இதுகுறித்து வரலட்சுமி கூறுகையில், “ அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் ” என்றார்.