பாலியல் உறவுக்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும் நடிகை கங்கனா ரனாவத் பேட்டியால் பரபரப்பு கண்டனங்கள் குவிகிறது
நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவுக்கு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியதுடன் போலீஸ், கோர்ட் என்று அவரை வம்புகிழுத்தார்.
இந்நிலையில் ஜான்சி ராணி சரித்திர படமாக உருவான மணிகர்னிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்தார். இப்படத்தை கிருஷ் இயக்கினார். அவரிடம் மோதல் போக்கை கங்கனா கடைபிடித்தார். இதையடுத்து படத்திலிருந்து கிருஷ் விலகி கொண்டார். பின்னர அப்படத்தின் இயக்குனர் பொறுப்பை கங்கனாவே ஏற்று இயக்கினார்.
தற்போது விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக அமெரிக்காவில் மேக் அப் டெஸ்ட்டில் கலந்துகொண்டார். இந்தியிலும் இப்படம் உருவாவதால் அதற்கும் தலைவி என்று பெயர் வைக்க வேண்டும் என கங்கனா வற்புறுத்தினார். அதை இயக்குனர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கங்கனா பாலியல் உறவு பற்றி வில்லங்கமான பேட்டி அளித்துள்ளார். அதில்,'பிள்ளைகளை பாதுகாப்பான பாலியல் உறவுக்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவதுடன், ஒருவருடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும். நான் (கங்கனா) 17 வயதாக இருக்கும்போதே பாலியல் உறவில் ஈடுபட்டதை எனது பெற்றோர் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரது வாழ்விலும் பாலியல் உறவு என்பது மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் உறவு கொள்ள வேண்டுமா, உறவு கொள்ளுங்கள். கொஞ்சம் மேற்கத்திய பாணியை மேற்கொள்வது தவறல்ல' என தெரிவித்திருக்கிறார்.
கங்கனாவின் பகிரங்கமாக பாலியல் உறவு பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கு கடும கண்டனம் எழுந்துள்ளது.