அசுரன் படத்தில் தனுஷ், மஞ்சுவாரியருடன் நடிக்கும் கருணாஸ் மகன் வட சென்னை படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம்
நடிகர் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். வட சென்னை படத்தையடுத்து இப்படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன். இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இப்படம் மூலம் முதன்முறையாக தமிழில் நடிக்க வருகிறார் மஞ்சுவாரியர். மேலும் நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மகன் கென் இப்படத்தில் தனுஷ் மகனாக நடிக்கிறார். ஏற்கனவே, ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, ரகளை புரம், அழகு குட்டி செல்லம் போன்ற படங்களில் நடித்துள்ள கென் தற்போது இளவயது வாலிபனாகி இருக்கிறார்.
தனுஷ் மகனாக நடிப்பது பற்றி கென் கூறும்போது,'தனுஷ்-வெற்றி மாறன் ஆகியோருடன் அசுரன் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம், அவர்களிடமி ருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது நடிப்புக்கு நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டினார்கள். தனுஷ் என்னிடம் இனிமையாகவும் அன்போடும் பழகினார். தனது வீட்டுபிள்ளை போல் என்னை பார்த்துக்கொண்டார்.
சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. எனது தந்தை கருணாஸ் எனது நடிப்பு ஆர்வத்தையும், திறமையும் பார்த்து சினிமாவில் நடிக்க வைத்தார்.
அசுரன் படத்தில் பொல்லாத பூமி என்ற பாடலை நான் பாடி இருக்கிறேன்' என்றார்.