கே,ஜி,எப் ஹீரோ யஷ்ஷின் வில்லனாகிறார் ஷாம் - ராதிகா பண்டிட் கதாநாயகியாக நடிக்கிறார்

கோலார் தங்கவயலில் அடிமைப்பட்டுக்கிடந்தவர் களின் கதையாக உருவானது கே.ஜி.எப் படம். இதன் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர் களை கவர்ந்தவர் யஷ். இவர் நடிக்கும் புதிய படம் சூர்யவம்சி இப்படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ளார்.

யஷ் ஜோடியாக ராதிகா பண்டிட் நடிக்கிறார். வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிகர் ஷாம். நீண்டநாட்களுக்கு பிறகு இப்படம் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். இவர்களுடன் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்சை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமை திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்சிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.

அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

More News >>