பால் தாக்கரே பேரன் ஆதித்யா.. ஒர்லி தொகுதியில் மனு தாக்கல்.. தேர்தலில் போட்டியிடும் முதல் தாக்கரே

சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான ஒரு இயக்கமாக மறைந்த பால் தாக்கரேவால் 1966ல் தொடங்கப்பட்ட இயக்கம்தான் சிவசேனா. மராத்தியர்களுக்குத்தான் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டுமென்றும், வேறு மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதை எதிர்த்தும் போராடியது. மேலும், இந்து தீவிரவாத இயக்கமாக செயல்பட்டது.

இதன்பிறகு அரசியல் கட்சியாக உருவெடுத்து 1995ம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலிலும் சரி, அதற்கு பிறகும் பால் தாக்கரே குடும்பத்தினர் யாருமே தேர்தலில் ேபாட்டியிட்டதில்லை. சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி, 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். 1999ம் ஆண்டில் நாராயண் ரானே முதலமைச்சராக ஓராண்டு பதவி வகித்தார். பால் தாக்கரே நேரடியாக எந்த அரசு பதவியையும் வகிக்கவில்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தை ரிமோட் கண்ட்ரோலில் வைத்திருந்தார்.

கடந்த 2012ல் பால் தாக்கரே மறைவதற்கு முன்பே அவரது இளைய மகன் உத்தவ் தாக்கரே அவரது இடத்தைப் பிடித்தார். உத்தவ் தாக்கரேவும் தேர்தலில் ேபாட்டியிட்டதில்ைல. தனது கட்சி அமைச்சர்களையும், மற்ற பதவிகளி்ல் இருப்பவர்களையும் ரிமோட் கண்ட்ரோலில் இயக்கி வந்தார்.

தற்போது முதல் முறையாக உத்தவ் தாக்கரே மகனும், சிவசேனா இளைஞரணி தலைவருமான ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் 21ம் தேதி மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஒர்லி சட்டசபைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக ஆதித்ய தாக்கரே நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் இன்று(அக்.30) ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்களின் பேராதரவுடன் நான் போட்டியிடுகிறேன் என்றார். 29வயதான ஆதித்யா இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், அதில் துணை முதல்வராக ஆதித்யா பதவிேயற்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News >>