ஹீரோவாகும் லெஜண்ட் சரவணன் ஜோடி ஹன்சிகா?... அஜீத் பட இயக்குனர்கள் டைரக்ட் செய்கின்றனர்...

லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் தனது ஜவுளி கடை விளம்பரத்தில் நடிக்க தொடங்கியபோது, அவரது தோற்றத்தை நய்யாண்டி செய்தனர். அதையெல்லாம் கடந்து அவர தொடர்ந்து தனது விளம்பர படங்களில் நடிக்கிறார். அதுவும் பிரபல நடிகர் போல் ஸ்டைல் செய்தும், நடந்தும் அசத்துகிறார். ஒரு சில விளம்பரங்களில் அவருடன் நடிகைகள் ஹன்சிகா, தமன்னாவும் நடித்திருந்தனர்.

சரவணைனை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் அணுகியபோது அவர் தவிர்த்து வந்தார். அடிக்க் அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இப் படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் படங்களை இயக்கியவர்கள். புதியபடம் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

இதில் ஹீரோயினாக நடிகை நயன்தாராவுக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டு வருவதாக முதலில் கூறப்பட்டது. தற்போது நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. ஆனால், அந்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'இது உண்மையல்ல' என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

இந்த படத்தில் காஸ்டியும் டிசைனராக தக்‌ஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதற்குமுன்பு அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பணியாற்றியவர் தாட்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

More News >>