அஜீத்துக்கு கதை சொன்ன 4 இளம் இயக்குனர்கள்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டம்
இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார்.
இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
மாஸ் இயக்குனர்களை விட வித்தியாசமாக கதை அம்சத்துடன் படம் இயக்கும் இயக்குனர்கள் நன்றாக ஹிட் தருகிறார்கள். கதையும் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை வந்திருக்கிறார் அஜீத். இதனால் தனது அடுத்தடுத்த படங்களையும் இளம் இயக்குனர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி தனது அடுத்த இரண்டு படங்களுக்கு இயக்குனரை தேடி வருகிறார். இதற்காக அவர் 4 பேரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.
விக்ரம் வேதா படம் எடுத்த புஷ்கர்-காய்த்ரி அஜீத்திடம் ஒரு டான் கதையை கூறி இருப்பதாகவும், துருவநட்சத்திரம் பட இயக்குனர் கார்த்திக் நரேன் திரில்லர் ஜானர் கதை ஒன்றையும் அஜித்திடம் கூறி இருக்கிறார்களாம். மேலும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆக்சன் திரில்லர் கதையும் கூறி உளளார்.
இந்த கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். மேலும் மாயா பட இயக்குனர் அஷ்வினும் அஜித்திடம் கதை கூறியிருக்கிறாராம். நான்கு இயக்குனர்களில் 2 இயக்குனரை தேர்வு செய்து அவர்கள் இருவரின் இயக்கத்தில் 2படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம் அஜீத்.