புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்காக.. தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விடும் சன்னி லியோன்..

பாலிவுட் நடிகை சன்னி லியோன் சினிமாக்களும், வீடியோக்களும் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை புற்று நோய் பாதிப்பால் சமீபத்தில்  இறந்தார்.

அந்த துக்கம் அவரை இன்னும் வாட்டிக்கொண்டிருக்கிறது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள டிவிட்டில், . நம்மை விட்டு பிரிந்தவர்களின் அன்பான நினைவுகளுடன் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை தூரிகையை தீட்டும்போதும் எந்த அளவிற்கு உங்களை நினைத்திருக்கிறேன். உங்களை எந்த அளவிற்கு மிஸ் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். கேன்சரில் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக இதனை ஏலம்விட்டு நிதி திரட்டப் போகிறேன்' என தெரிவித்துள்ளார்.

More News >>