அருண் விஜய் விஜய் ஆண்டனியுடன் இணையும் அக்ஷரா ஹாசன்...
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது.
டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்ராயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் அக்ஷரா ஹாசன். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார்.
ஐரோப்பா, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் முதற்கட்டமான 50 நாட்கள் இப்படட்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் நேற்று வெளிநாடு புறப்பட்டுச் சென்றனர்.