தாஜ்மஹாலிலிருந்து தொடங்கிய ஜஸ்டின் ட்ரூடே: ஒரு வார இந்திய சுற்றுப்பயணத்தில் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே ஒரு வாரப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

சர்வதேச அளவில் பல நாட்டு மக்களையும் ஒரு போர்வையின்கீழ் அரவணைக்கும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே ஒரு வாரப் பயணமாக இந்தியாவுக்கு தனது குடும்பத்துடன் சனிக்கிழமை மாலை வந்தார்.

நேற்று தாஜ்மஹாலில் இருந்து தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது ட்ரூடே குடும்பம். இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே வேலைவாய்பு மற்றும் இரு நாடுகளின் உறவு மேம்பாடு ஆகியபை இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் அழமாக்க உள்ளதாக கனடா பிரதமர் ட்ரூடே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள ட்ரூடே தனது அலுவல் ரீதியிலானப் பயணத்தில் குடும்பத்துடன் இருப்பது தனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாகக் கூறியுள்ளார்.

இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் ட்ரூடே. அங்கு ஐஐஎம் மாணவர்களுடன் உரையாற்றும் ட்ரூடே, நாளை மும்பையில் சினிமா பிரபலங்களுடன் சினிமா துறை குறித்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பின்னர் வருகிற 23-ம் தேதி மோடி உடனான சந்திப்பில் வர்த்தகம், பாதுகாப்பு, அணு ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

More News >>