அரசியலுக்கு வராதீர்கள்.. ரஜினிக்கு அமிதாப் அட்வைஸ்.. சிரஞ்சீவியும் அறிவுரை...
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக இப்படத்தின் புரமோஷ்ன் நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ”சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அட்வைஸ் செய்தேன்.
அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை இப்போது ரஜினிகாந்துக்கும் சொ்ல்லி இருக்கிறேன்” என்றார்.
அதேபோல் சிரஞ்சீவி பேசுபோது.”அரசியலுக்கு வந்தால் மரியாதை இருக்காது என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். எனவே என் நண்பர்கள் ரஜினியும். கமலும் அரசியலுக்கு வரவேண்டாம்” என்றார்.