ராட்சசன் படத்துக்கு 4 அமெரிக்க விருது.. விஷ்ணு விஷால்- அமலாபால் ஹேப்பி..
விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த படம் ராட்சசன் இப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கினார். சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளை ராட்ச்சன் படம் பெற்றது. இந்நிலை யில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ராட்சசன் படம் கலந்துக் கொண்டது.
இதில் 4 விருதுகளை இப்படம் தட்டி வந்திருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
ரட்ச்சன் படம் 4 விருதுகளை பெற்றதற்கு விஷ்ணூ விஷால், அமலாபால் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.