கபடி பயிற்சியாளராக நடிக்கிறார் தமன்னா.. கபடி ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்கிறார்
சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள தமன்னா தட் ஈஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
சம்பத் நந்தி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கபடி விளையாட்டு பயிற்சியாளராக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதற்காக கபடி பயிற்சி பெறுவதுடன் அதன் நுணுக்கங்களை கற்றுவருகிறார்