எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் மான்ஸ்டர் நடிகை.. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் ..
வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது.
இப்போது இதே கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்தை ராதாமோகன் இயக்க பேச்சு நடக்கிறது, ராதாமோகனும், எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்து பணிபுரியும் இப்படத்தில் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட ஒரு கேரக்டரில் எஸ்,ஜே,சூர்யா நடிக்கிறார் உள்ளாராம்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படப் பிடிப்பு பணிகள் இம்மாதம் தொடங்கி என்றும் 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.