விஜய்யுடன் நடிக்கும் கனவு நிஜமானது.. மகிழ்ச்சியில் மிதக்கும் சாந்தனு..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் சாந்தனு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
விஜய்யுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு பாற்றி சாந்தனு, தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
கனவுகள் நிஜமாகும்! என் ஃபேவரிட் நடிகரான விஜய் அண்ணாவுடன் நடிப்பதில் மகிழ்ச்சி!
விஜய்-64-ல் வாய்ப்பளித்தமைக்காக விஜய் அண்ணாவுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். சாந்தனு, விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.