கார்த்தியின் கைதி ரீலீஸ் தேதி .. அடுத்து ஜோதிகா படம் உள்பட 2 படங்களில் பிஸி..

கார்த்தி நடிக்கும் புதிய படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கைதி படத்தை தீபாவளியில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சாம்.சி.எஸ். இசை அமைக்க ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைத்திருக்கிறார்.

கைதி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி. ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் ஜோதிகாவுடனும். ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

More News >>