ldquoவளரவே வேண்டாம்rdquo: வைரலாகும் ஷாகித் கபூர்- மீரா ஜோடி!
பாலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ஷாகித் கபூர் தனது மனைவியுடன் வெளியிட்டப் புகைப்படம் தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஜோடிகளாகக் கருதப்படும் ஜோடிகளில் முக்கியமானவர்கள், ஷாகித் கபூர்- மீரா ராஜ்புட் தம்பதியினர். கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் முடித்த இந்தத் தம்பதியினருக்கு மிஷா என்ற ஒரு வயதுக் குழந்தையும் உள்ளது.
பெற்றோர்கள் பார்த்துப் பேசி முடித்தத் திருமணம் என்றாலும் காதல் ஜோடிகளே தோற்றுப்போகும் அளவுக்கு இத்தம்பதியினர் தங்கள் காதல் பக்கங்கள் மூலம் ஆன்லைனில் வைரலாகி வருகின்றனர்.
சமீபத்தில் மீரா ராஜ்புட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் மீரா தனது கணவர் ஷாகித் உடன் உள்ளார். இருவரது கைகளிலும் 'வளர வேண்டாம்' என்று எழுதப்பட்டிருந்த ஒரு அலங்கார தலையணையை வைத்திருந்தனர். மேலும் சமீப காலமாக இந்த ஜோடி பொதுவெளியில் எங்கு வந்தாலும் அந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஷாகித் கபூர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 'பத்மாவத்' வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேலாக வசூல் சாதனையை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.