காஷ்மீர் போலீஸ் அலுவலகம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

0காஷ்மீர் மாநிலத்திற்்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அரசியல் தலைவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து, தொலைபேசி, இணையதள சேவைகள் தொடங்கப்பட்டன. தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்் நடத்தினர்.

காஷ்மீரில் இருந்து 55 கி.மீ. தூரத்தில் தெற்கு காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் உள்ளது. இங்குள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தின் மீதுதான் தீவிரவாதிகள் இன்று காலை 10 மணியளவில் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆனால், அலுவலகம் மீது குண்டுகள் விழாமல்் அதற்கு முன்பே சாலையில் விழுந்து வெடித்தனர். இதில், 10 பேர் வரை காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனம் சேதமடைந்தது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு ெகாண்டு செல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு, தீவிரவாதிகளை சுற்றி வளைக்க தீவிர தேடுதல்் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

More News >>