எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி... வேகமெடுக்கும் ஜெயலலிதா வாழ்க்கைப்படம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் படமாகிறது.

ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தது.

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அது உறுதி ஆகியுள்ளது. ரோஜா, பம்பாய். தனிஒருவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இப்படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். இவர் இயக்குனர் ராஜமவுலியின் தந்தை அத்துடன் பாகுபலி படத்தின் திரைக்கதையை இவர்தான் எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

More News >>