பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு அஜீத் பை பை... புதிய லுக்குடன் வந்தவரை சுற்றிவளைத்த ரசிகர்கள்
விஸ்வாசம் உள்ளிட்ட அடுத்தடுத்த படத்தில் பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்த தனது அடுத்த படத்தில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.
அதற்காக அவர் பெப்பர் சால்ட் தோற்றத்திலிருந்து பிளாக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர். அஜித்தும் பொறுமையாக அனைவருடனும் செல்பி எடுத்து கொண்டார். ஒருசிலரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி அவரே செல்பி எடுத்து கொடுத்தார்.ஆனால் அவர் புதியபடம் பற்றி அறிவிக்காத நிலையில் இளமை தோற்றத்துடன் டெல்லியில் உள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடும் மையத்திற்கு அஜித் சென்றுள்ளார். அங்கு அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.