ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தில் டேனியல் கிரேக் .. டைடட்டில் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு.. நோ டைம் டு டை...
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் 'நோ டைம் டு டை'.
டேனியல் கிரேக் தான் இப்படத்திலும் 007 வேடத்தில் நடிக்கிறார். காரி ஜோ பிக்குங்கா இப்படத்தை இயக்கி வருகிறார். ராமி மாலிக் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நோ டைம் டூ பை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டா வெளியானது. அடுத்து வருடம் ஏப்ரல் 2020 இல் இப்படம் ரிலீசாகிறது.
நாவலாசிரியர் அயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமாக ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் அமைந்துள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளி தான் (எம்ஐ 6) ஜேம்ஸ் பாண்ட் என்கிற 007 . ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 'நே டைம் டு டை' படம் 25 ஆவதாக ரிலீசாகிறது.