அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். இதில், தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் அம்மு அபிராமி, டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், கென் கருணாஸ், பசுபதி, சுப்ரமணியம் சிவா, பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது .
பொதுவாக தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களின் படம் வெளியாகும்போது காலை சிறப்பு காட்சிகள் எதுவும் இருக்காது. மெகா ஸ்டார்கர்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் இருக்கும். அசுரன் படம் நேற்று வெளியானது. சென்னையில் மட்டுமே ஒரு சில தியேட்டர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் இருந்தது. இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகள் இடம்பெற்றன.
கர்நாடகாவில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிடப்பட்டது . மேலும் 5 தியேட்டர்கள் சேர்க்கப்பட்டது . திருநெல்வேலி மாவட்டம் , தென் ஆற்காடு , வட ஆற்காடு மாவட்டங்களிலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது .
இதுபோன்ற சிறப்புக்காட்சிகள் பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , தளபதி விஜய் , அஜித்குமார் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம் அந்த பட்டியலில் தனுஷும் இணைந்துள்ளார் என அவரது மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.