ஹீரோக்களைப்போல் ஹீரோயின்களுக்கும் திரையுலகில் மவுசு கூடிவிட்டது...
நண்பன் படஹீரோயின் இலியானா தற்போது இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ஹீரோக்களைப்போல் ஹீராயின்களுக்கும் மவுசு கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தெலுங்கில் அறிமுகமாகி தமிழ், இந்தி என்று எல்லா மொழி படங்களிலும் நடித்து விட்டேன் வந்தேன். வயதை பொறுத்தே அனுபவம் வரும். சினிமா துறைக்கு வந்த புதிதில் வந்த வாய்ப்பை எல்லாம் ஏற்று நடித்தேன். ஆனால் இப்போது முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன். கதைகள் தேர்வு செய்வதில் பக்குவம் வந்திருக்கிறது.
முன்பெல்லாம் ஹீரோக்கள்தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்றநிலையிருந்தது. நடிகை களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இப்போது நிறைய நடிகைகள் 10 ஆண்டுகள் கடந்தும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனது பயணமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
இவ்வாறு இலியானா கூறினார்.