ரஜினியின் 2.0 படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த பிகில்..
விஜய் நடித்து முடித்துள்ள பிகில் வரும் தீபாவளியில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாக இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிகில்திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் ரஜினியின் 2.0 படத்திற்கு அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் இதுதான் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2.0 திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 570 கோடி நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படமாக ரூபாய் 180 கோடியில் தயாரான படமாக பிகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கால்பந் தாட்டப் போட்டி குறித்த கதையம்சம் கொண்ட இப்படம் தெறி மற்றும் மெர்சல் படங்களை அடுத்து விஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.